Home இலங்கை சமூகம் மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

0

களனிப் பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் சி.டபிள்யூ.டபிள்யூ. மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிபத்கொட வைத்தியசாலை

குறித்த மாணவன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் களனி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/university-student-died-after-falling-from-floor-1729654161

NO COMMENTS

Exit mobile version