வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரை பவுண் சங்கிலியை எடுத்த
பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (24.11) இடம்பெற்றுள்ளது.
வவுனியா மருத்துவமனையின் பொலிஸ் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த
பொலிஸ் சர்ஜென்ட் (46674) திலகரதன என்ற அதிகாரி வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுண் தங்கச்
சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.
தங்கச்சங்கிலி பொலிஸ் மையத்தில் பாதுகாப்பு
இதன் பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன்,
அந்த தங்கச்சங்கிலியை பொலிஸ் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.
இந்நிலையில்,, ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னுடைய
தங்கச் சங்கிலி விழுந்து விட்டதாக தேடி வந்த போது, மருத்துவமனை பொலிஸ் காவல்
மைய அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும்
அவருக்கு கையளித்துள்ளனர்.
இதன்போது குறித்த மாணவியின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீர் வழிந்ததுடன் அந்த பொலிஸ் அதிகாரிக்கு
நன்றி தெரிவித்துள்ளனர்.
