Home இலங்கை குற்றம் முகமூடி அணிந்த மூன்று நபர்களால் பெண்களுக்கு நேர்ந்த கதி

முகமூடி அணிந்த மூன்று நபர்களால் பெண்களுக்கு நேர்ந்த கதி

0

பாணந்துறையில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை – மடுப்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வசிக்கும் இரண்டு பெண்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பெண்கள் மீது தாக்குதல்

இரு பெண்களும் கைகால்களில் காயங்களுக்குள்ளான நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/unknown-group-attack-women-in-panadura-1729836098

NO COMMENTS

Exit mobile version