Home இலங்கை அரசியல் தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை மீறிய அரசாசங்கம்! குற்றம்சாட்டும் ஐ.தே.க

தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை மீறிய அரசாசங்கம்! குற்றம்சாட்டும் ஐ.தே.க

0

தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை அரசாங்கம் முறையாக பயன்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிலவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்திருந்தார்.

 அரசாங்கம் என்ன செய்தது

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பேரிடர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

பிபிசி செய்தி சேவை அனர்த்தம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்தது. 500 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிவதாக அறிவித்திருந்தது. நவம்பர் 23 ஆம் திகதி மீண்டும் பிபிசி இந்தோனேசியா – மலேசியாவுக்கு சென்ற சூறாவளி இலங்கைக்கு வருவதாக கூறியுள்ளனர். அரசாங்கம் என்ன செய்தது.

  

தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் சட்டத்திட்டங்களைக் கூட செயற்படுத்த தவறிய அரசாகவே நாம் நோக்குகிறோம். பேரிடரின் போது அரசாங்கம் எடுத்த ஒவ்வொரு தவறான முடிவுகளையும் நாம் ஆராய்ந்து வருகிறோம்.

அரசாங்க ஊழியர்கள் தீர்மானம் எடுக்க அஞ்சுகின்றனர். இன்றைய நிலையில் நாடு பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. சுனாமியை விட இரு மடங்கு பாதிப்பை நாடு சந்தித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டு,அவை இறக்குமதி செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

NO COMMENTS

Exit mobile version