Home முக்கியச் செய்திகள் ரணிலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பகரும் ஐ.தே.க

ரணிலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பகரும் ஐ.தே.க

0

இந்த காலகட்டத்தில் தனது கட்சி சார்பாக அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம்(akilavi raj kariyavasam) தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (ranil wickremesinghe)ஆதரிக்க 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், ஒரு பெரிய கூட்டமும் வந்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக அவர் மேலும் கூறினார்.

அனைவருக்கும் நன்றி

மேலும், ஊடகங்களுக்கு பேட்டியளித்த ஐ.தே.க துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவும்(ruwan wijewardene) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் அவர் குறிப்பாக நன்றி தெரிவித்தார்.

 நாமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னிலையான அனைத்து வழக்கறிஞர்களுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/Yhc14PQTRPU

NO COMMENTS

Exit mobile version