Home இலங்கை சமூகம் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை! சபா குகதாஸ் ஆதங்கம்

தீர்க்கப்படாத இனப்பிரச்சினை! சபா குகதாஸ் ஆதங்கம்

0

இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய தினம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய
உரிமை முழுமையாக பறிக்கப்பட்ட நாளாகவே அமைந்தது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக 1948 ஆண்டில்
இருந்து இன்று வரை இலங்கைத்தீவில் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படாத ஒன்றாக
தொடர்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கரிநாள்

“தமிழர்களை பொருத்தவரை 1948 இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள் அதில்
மாற்றுக் கருத்து கிடையாது இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால் தேசிய
இனப்பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர் உண்மையான தீர்வை வழங்குவதன் மூலமே
இலங்கைத் தீவில் உண்மையான சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் உணரமுடியும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் ஆட்சியாளர்கள் தீர்வினைப் பெற்றுக்
கொடுக்காது எளிமையாக சுதந்திர தினத்தை கொண்டாடுதல் மற்றும் ஐனாதிபதி சாதாரண
மக்களுடன் அமர்ந்திருந்து படம் காட்டுதல் போன்றன சிறுவர்களுக்கு மிட்டாய்
கொடுத்து ஏமாற்றுவது போலவே அமையும்.

எனவே நாடு உறுதியாக முன்னோக்கி பொருளாதார
மற்றும் அபிவிருத்தி ரீதியாக நகர வேண்டுமாயின் சகல இன மக்களும் ஏற்றுக்
கொள்ளக் கூடிய வகையில் சுதந்திர தினம் மாற்றப்பட வேண்டும்” என
குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version