மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் பெயர் பலகைகள் வைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாவட்டமே கொந்தளித்துப்போய் உள்ளது.
தமிழரசுக் கட்சியின் ஏனைய தவிசாளர்கள் போராட்டங்கள் நடாத்தி பெயர் பலகைகளை பிடிங்கி எரிந்து கொண்டு இருந்த போது ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மட்டும் எங்கே போயிருந்தார் ? என்ற கேள்வியை ஏறாவூர் பற்று பிரதேச மக்கள் எழுப்பியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் தான் அதிகளவான தொல்லியல் இடங்களை தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ளது.
இது குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தவிசாளரின் கவனத்திற்கு கொண்டுவந்த போதும் தவிசாளர் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச தவிசாளர் மாத்திரமே வெறுமனே வடி சாராயம் பிடிப்பது, மாடு பிடிப்பது மற்றும் ஆர்ப்பாட்டம் செய்வது என தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்த தெரியாது செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் ஏனைய தவிசாளர்கள் தங்களது அதிகாரங்களை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.
நுன்கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை, தனியார் வகுப்புகள் குறித்த நடவடிக்கை மற்றும் அதிகூடிய வட்டி வசூலிக்கும் நகை கடைகள் மீது நடவடிக்கை என தொடங்கி தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது வரை மக்களுக்காக களத்தில் நின்று போராடும் தமிழரசுக் கட்சியின் தவிசாளர்களுக்கு மத்தியில் ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏன் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து தமிழரசுக் கட்சியின் உயர் பீடம் கவனம் செலுத்துமா ? கதியை சூடாக்கி கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தவிசாளரால் ஏறாவூர் பற்று பிரதேச பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
