Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் மூழ்கடிக்கப்பட்ட மட்டக்களப்பு: தடைப்பட்டுள்ள போக்குவரத்து

சீரற்ற காலநிலையால் மூழ்கடிக்கப்பட்ட மட்டக்களப்பு: தடைப்பட்டுள்ள போக்குவரத்து

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில் மாவட்டத்தின் பிரதான தரை வழிப்போக்குவரத்துக்கள் தற்போது வரையில் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மண்டூர் குருமண்வெளி படகுப்பாதை, அம்பிளாந்துறை குருக்கள்மடம்
படகுப்பாதைப் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

பட்டிருப்பு
பெரியபோரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிசசோலை பிரதான வீதி, வவுணதீவு
மட்டக்களப்பு நகர் பிரதான வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர்
பாய்ந்து வருவதால் அவ் வீதிகளுடனான தரைவழிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

எனினும் மிக அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் ஒருசில இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுவதையும், உழவு இயந்திரங்களில் மக்கள் பயணம் செய்து நகர்புறங்களுக்கு
வந்து தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு
செல்வதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த்தினால் 15,900
குடும்பங்களைச் சேர்ந்த 49,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 11,890
குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில்
தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் 56 பொது இடங்களில் 2558 குடும்பங்களைச்
சேர்ந்த 7241 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர்
பிரிவுகளிலும், வெள்ளத்தினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்டத்தின்  தற்போதைய நிலையை கீழ் உள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/U_IRKDU-Ejs

NO COMMENTS

Exit mobile version