மோசமான வானிலை காரணமாக மலையக தொடருந்து சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்று தொடருந்து திணைக்கள அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட இரவு அஞ்சல் தொடருந்து இப்போது நானுஓயா நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
நானுஓயாவிலிருந்து பயணத்தைத் தொடங்கும்
இதேபோல், பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் இரவு அஞ்சல் சேவை நானுஓயாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.
பயணிகள் மலையக முக்கிய பாதையை பாதிக்கும் இந்த இடையூறு குறித்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
