Home விளையாட்டு தப்பினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் : மீளப்பெறப்பட்டது பிடியாணை

தப்பினார் முன்னாள் கிரிக்கெட் வீரர் : மீளப்பெறப்பட்டது பிடியாணை

0

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரரும் தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான உபுல் தரங்க நீதிமன்றில் முன்னிலையாகாததன் காரணமாக அவருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டது.

போட்டி சூதாட்டம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் வீரர் உபுல் தரங்க உரிய வழக்கில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

சட்டத்தரணி ஊடாக வழங்கிய வாக்குறுதி

எதிர்வரும் தினங்களில் குறித்த வழக்கு மாத்தளை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படும் போது மன்றில் முன்னிலையாவதாக உபுல் தரங்க தனது சட்டத்தரணி ஊடாக வழங்கிய வாக்குறுதியை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குறித்த பிடியாணை உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு உபுல் தரங்கவினால் இன்றைய தினம் மேன்முறையீட்டு நிதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Source: https://ibctamil.com/article/upul-tharanga-recovered-warrant-1730302581

NO COMMENTS

Exit mobile version