Home இலங்கை சமூகம் பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்ட சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை

பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்ட சம்பவம்: பொலிஸார் தீவிர விசாரணை

0

நுவரெலியா மற்றும் ஹை ஃபொரஸ்ட் இடையே இயக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை
பேருந்தின் இயந்திரத்தில் யூரியா உரம் இடப்பட்டதாக கூறப்படும் சம்பவம்
குறித்து நுவரெலியா பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஹை ஃபொரஸ்டில் வைத்து இடம்பெற்றுள்ளது. 

வழக்கமான சோதனை

வழக்கமான சோதனைகளின் போது டிப்போ அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இயந்திரத்தை சுற்றி வெள்ளையான இரசாயனங்கள் காணப்பட்டதை அவர்கள்
கண்டறிந்துள்ளனர்.

பொலிஸில் முறைப்பாடு

வேண்டுமென்றே நாசவேலை செய்யப்பட்டதாக சந்தேகித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்
பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளனர். 

இந்த நிலையில் பேருந்து இயந்திரத்தை இயக்காமல் முழு ஆய்வுக்காக டிப்போவிற்கு பேருந்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version