Home இலங்கை சமூகம் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவித்தல்

0

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேலுக்கு செல்லத் திட்டமிடுபவர்கள் தங்கள் விமான பயணங்களை தாமதப்படுத்துவது நல்லது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான பயணங்கள்

இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் உட்பட பிராந்தியம் முழுவதும் விமான பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version