அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருவதால் இஸ்ரேலில் தொடர்ந்து சைரன்கள் ஒலிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி காமேனி எச்சரிக்கை விட்டுள்ளார்.
இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும் போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார்.
ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
