Home உலகம் மூளும் மூன்றாம் உலகப் போர் – ஈரானை தாக்கிய அமெரிக்கா இரும்பு பறவை: அதிர்ச்சியில் உலகம்

மூளும் மூன்றாம் உலகப் போர் – ஈரானை தாக்கிய அமெரிக்கா இரும்பு பறவை: அதிர்ச்சியில் உலகம்

0

அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள் ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி உள்ள தாக்குதல்கள் மூலம் அங்கே அணுக்கசிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களில் அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

வெற்றிகரமான தாக்குதல்

அமெரிக்கப் படைகள் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம் என டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version