Home அமெரிக்கா காசாவை கைப்பற்றும் அமெரிக்காவின் தீர்மானம்! ட்ரம்பிற்கு எதிராக வெகுண்டெழுந்த நாடுகள்

காசாவை கைப்பற்றும் அமெரிக்காவின் தீர்மானம்! ட்ரம்பிற்கு எதிராக வெகுண்டெழுந்த நாடுகள்

0

காசாவை கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீர்மானத்திற்கு பாலஸ்தீனியர்கள், எகிப்து, சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்கா ஒரு நீண்டகால உரிமை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து மீள்குடியேற்றப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் கருத்து

இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த திட்டங்கள் அபத்தமானது என தெரிவித்துள்ள ஹமாஸ், பலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தில் செழிப்பாக வாழ வேண்டும் என்று இங்கிலாந்து கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version