Home இலங்கை பொருளாதாரம் இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரி குறைப்பை பாராட்டும் ஹர்ஷ டி சில்வா!

0

இலங்கை ஏற்றுமதிகள் மீதான வரிகளைக் குறைக்க அமெரிக்கா எடுத்த முடிவு குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றிய சகலரையும் அவர் பாராட்டியுள்ளார்.

இந்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வரிகள்

அந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க வரிகள் 20% ஆக குறைக்கப்பட்டிருப்பது
மகிழ்ச்சி அளிக்கிறது.

பிராந்திய ரீதியாக நாம் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருக்க முடியும்.
இலங்கை தரப்பில், இதற்காக உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

நமது வரம்புகளைப் புரிந்துகொண்டதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு நன்றி
தெரிவிக்க விரும்புகிறேன்.

நம்மைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்து உலகிற்கு பாலங்களை அமைப்பதில் எப்போது
தீவிரமாகப் பணியாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version