Home உலகம் வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தின் உலகம்

வானில் நகரும் அமெரிக்காவின் சூழ்ச்சி: பதற்றத்தின் உச்சத்தின் உலகம்

0

அமெரிக்கா (United States) தனது B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்களை அனுப்பியுள்ள நிலையில், இஸ்ரேல் (Israel) – ஈரான் (Iran) இடையிலான மோதல் புதிய கட்டத்திற்கு செல்லும் என நம்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல்- ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் பாம்பர் விமானங்கள் மிசோரி மாகாணத்தின் Whiteman Air Force Base இலிருந்து புறப்பட்டு பசிபிக் கடல் பகுதியில் உள்ள குவாம் தளத்துக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.

இதை இஸ்ரேலின் பத்திரிகையொன்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இந்த பாம்பர்களுடன் நான்கு KC-46 Pegasus refueling planes இணைந்து பறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரு விமானங்கள்

இதில் இரு விமானங்கள் ஏற்கனவே பசிபிக் கடல் பரப்பில் B-2 இற்கு எரிபொருள் நிரப்பியுள்ளன.

மற்ற இரண்டு விமானங்கள் 75 கி.மீ தூரத்தில் பின் தொடர்கின்றன அத்தோடு, சான் பிரான்சிஸ்கோவின் வட பகுதியில் இருந்து இரண்டு refueling planes மேலும் புறப்பட்டுள்ளன.

அவை ஹவாய் பகுதியில் எரிபொருள் நிரப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் B-2 ஸ்டெல்த் பாம்பர் ஒவ்வொன்றும் 2.1 பில்லியன் டொலர் மதிப்புள்ளவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் தனிப்பட்ட 15 டன் அளவுள்ள “bunker-buster” குண்டுகளை ஏந்தி செல்லக்கூடிய ஒரே விமானமாகும்.

ஈரானின் பாதுகாப்பு 

இவை, ஈரானின் பாதுகாப்பு மிகுந்த Fordow அணு நிலையத்தை குறிவைக்க பயன்படக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டால் அது அனைவருக்கும் ஆபத்தானது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

அத்தோடு, “ஊடுருவல் போர்கள் நடக்கும் போது நாம் அமெரிக்காவுடன் அணு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடர முடியாது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கு இடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இரண்டு வாரத்தில் முடிவெடுப்பதாக கூறியிருந்த நிலையில், தற்போது பில்டிங் அதிகாரிகளிடமிருந்து உளவு தகவல்கள் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.

NO COMMENTS

Exit mobile version