Home இலங்கை சலே கணினிக்குள் U.S படை கில்லாடிகள்… SL கடற்படை இனி அமெரிக்க பிடியில்!

சலே கணினிக்குள் U.S படை கில்லாடிகள்… SL கடற்படை இனி அமெரிக்க பிடியில்!

0

அமெரிக்காவால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட வுர்-57 ‘சீ றேஞ்சர்”ஹெலிகள் நேற்று வரிசை கட்டி ரெஸ்ற்பிளைற் எனப்படும் சோதனைப் பறப்புகளை மேற்கொண்ட நகர்வு உட்பட இலங்கையில் உயர் அமெரிக்க புள்ளிகளின் பிரசன்னத்துடன் சில மிசன்கள் கச்சிதமாக நடக்கின்றன.

அதிலும் சிறிலங்கா கடற்படையின் அனைத்து போர்க்கலங்களிலும் அதி நவீன செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் செருகப்படும் என அமெரிக்கா நேற்று நுட்பமாக அறிவித்தமை இங்கு முக்கியமானது.

இலங்கையை அண்டிய கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த உதவ இந்த நவீன கருவிகள் பொருத்தப்படவுள்ளதாக சொல்லப்பட்டாலும் இந்த கருவிகள் குந்தப்போவதன் உண்மையாக நோக்கம் அதுவல்ல.

சிறிலங்கா கடற்படை விரைவில் அமெரிக்க புறொக்சி நேவியாக மாறவிருப்பதற்கான கட்டியங்கள் இவை.

இதற்கிடையே இலங்கையில் தற்போது நிற்கும் அமெரிக்க படைமுகங்களில் சிலர் இணைய பாதுகாப்பு நிபுணர்களாக இருப்பதால் சிறிலங்கா சிஐடியால் இதுவரை திறக்கமுடியாமல் உள்ள சுரேஸ் சலேயின் மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசியை திறக்க அவர் உதவியிருக்கவும் கூடும் என்ற ஊகங்களும் உள்ள நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு

https://www.youtube.com/embed/wWPhgGbmeNU

Source: https://ibctamil.com/article/us-donated-ten-th-57-helicopters-to-sri-lanka-1782213005

NO COMMENTS

Exit mobile version