Home உலகம் அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

0

அமெரிக்காவின் புலனாய்வு அதிகாரிகள் (FBI)தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரானால் அமெரிக்காவிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வரவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களைத் தாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து ஈரானிடம் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த அந்நாடு அதீத கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

குடியேற்ற நடைமுறை

இந்தநிலையில், தற்போது ஈரானில் இருந்து அச்சுறுத்தல் அளவு உயர்ந்துள்ளதால் குடியேற்ற நடைமுறையில் தங்கள் நேரத்தின் ஒரு பகுதியைக் குவிக்கும் ஆணையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று FBI அதிகாரிகள் அண்மைய நாட்களில் சில முகவர்களுக்குத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் பணிபுரியும் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை எதிர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு முகவர்கள் தொடர்பாக ட்ரம்ப், இந்த FBI அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version