Home உலகம் அமெரிக்க எல்லை அருகே பறந்த ரஷ்ய உளவு விமானம்

அமெரிக்க எல்லை அருகே பறந்த ரஷ்ய உளவு விமானம்

0

அமெரிக்காவின் அலாஸ்கா வான் எல்லை அருகே நேற்று ரஷ்ய உளவு விமானம் பறந்ததில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் இலூசின் – 20 உளவு விமானம் அமெரிக்க எல்லை அருகே பறந்ததை அலாஸ்காவில் நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு ரேடார் கண்டறிந்தது.

ரஷ்ய உளவு விமானம்

இதையடுத்து உடனடியாக அமெரிக்காவின் எப்-16 போர் விமானங்கள் விரைந்து சென்று ரஷிய உளவு விமானத்தை இடைமறித்து தடுத்து நிறுத்தின.

இதையடுத்து ரஷ்ய உளவு விமானம் சர்வதேச வான்பரப்பிற்குள் நுழைந்தது.

கடந்த ஒருவாரத்தில் அலாஸ்கா எல்லை அருகே 3 முறை ரஷ்ய உளவு விமானங்கள் பறந்துள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்குமுன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷிய அதிபர் புதின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version