ஈரானுடனான இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்தில் அமெரிக்காவிடம் 20 சதவீத THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போரில் ஈரான் தனது தரப்பில் இருந்து காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அளித்ததாக இராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது.
இஸ்ரேல் – ஈரான்
இந்த நிலையில் இந்த மாத மத்தியில் திடீரென இஸ்ரேல் ஈரானின் அணுஆயுத திட்டத்தில் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்த தொடங்கியது.
இதற்கு பதிலடியாக ஈரான் அதிநவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கியது. 12 நாட்களாக நடைபெற்ற இந்த போர் பின்னர் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
குறித்த பொரில் இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
THAAD ஏவுகணை
இதன்போது ஈரான் ஏவுகணைகளை இந்த THAAD ஏவுகணைகள் இடைமறித்து அளித்தன. ஈரான் காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இவற்றை 60 முதல் 80 முறை அமெரிக்காவின் THAAD ஏவுகணை சிஸ்டம் இடைமறித்து அளித்ததாக இராணுவ கண்காணிப்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் THAAD சிஸ்டத்தை பயன்படுத்த 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவாகும் என கூறப்படுகிறது.
12 நாட்களாக நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அளிக்க 810 மில்லியன் முதல் 1.215 பில்லியன் டொலர் வரை செலவு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
