Home அமெரிக்கா இரண்டாவது வாரத்தை அடைந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம்

இரண்டாவது வாரத்தை அடைந்த அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம்

0

அமெரிக்க அரசாங்கத்தில் முடக்கம் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளது.

எனினும், நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்
குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே எந்த
ஒப்பந்தமும் ஏற்படுவதற்கான அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க தகவல்கள்
கூறுகின்றன.

நிதி முடக்கம்

காலாவதியான “ஒபாமாகேர்” சுகாதார மானியங்களை நீடிப்பது மற்றும் டிரம்பின் “ஒன்
பிக் பியூட்டிஃபுல் பில்” இன் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட சுகாதாரத்
திட்டங்களை மாற்றுவது தொடர்பில், இரண்டு கட்சியினருக்கும் இடையில் உடன்பாடு
எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஆளும் குடியரசுக் கட்சியினருக்கு தேவையான செனட் ஆதரவை வழங்க
ஜனநாயகக் கட்சியினர் மறுத்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே, அமெரிக்காவில் நிதி முடக்கம் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version