Home அமெரிக்கா இதுவரை மனிதர்களுக்கு ஏற்படாத கொடிய நோயால் பலியான அமெரிக்கர்

இதுவரை மனிதர்களுக்கு ஏற்படாத கொடிய நோயால் பலியான அமெரிக்கர்

0

மனிதர்களுக்கு இதுவரை ஏற்படாத கொடிய பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக வாஷிங்டனில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர், H5N5 என்ற பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, அடிப்படை உடல்நலக் குறைபாடுகள் உள்ள ஒரு வயதானவர் என கூறப்படுகின்றது. 

முதல் சம்பவம் 

ஒன்பது மாதங்களில் அமெரிக்காவில் ஒரு மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட முதல் சம்பவம் இது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அமெரிக்காவில் வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மனித மரணம் இதுவாகும்.

ஆனால், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் வைரஸால் பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளது என்றும் கூறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version