Home உலகம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் இவரே முன்னிலை!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் இவரே முன்னிலை!

0

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறு தினம்(05) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பு

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இருவரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

அந்த வகையில், கமலா ஹாரிஸ், ஜார்ஜியாவிலும் டிரம்ப் வடக்கு கரோலினாவிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அயோவா மாகாணத்தில் நடந்த இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்றார்.

இதன்போது, அவருக்கு 47 சதவீத ஆதரவு கிடைத்ததுடன் டிரம்புக்கு 44 சதவீத ஆதரவு கிடைத்தது.

அதன்படி, டிரம்பை விட கமலா ஹாரிஸ் 3 சதவீதம் அதிகம் பெற்றுள்ளார்.

அரசியல் நிபுணர்களின் கூற்று

2016ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அயோவா மாகாணத்தில் டிரம்ப் எளிதில் வெற்றி பெற்று இருந்தார். தற்போது அங்கு அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மற்றொரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்று அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version