Home உலகம் எக்ஸ் தளத்தை வாங்குவதில் முறைக்கேடு : எலான் மஸ்க் மீது வழக்கு

எக்ஸ் தளத்தை வாங்குவதில் முறைக்கேடு : எலான் மஸ்க் மீது வழக்கு

0

டெஸ்லா (Tesla) நிறுவனரான எலான் மஸ்க் (Elon Musk) மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமை தற்போது சமூக வலைதளங்களில் பாரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

எக்ஸ் தளத்தை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) குற்றம் சாட்டியுள்ளது.

எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டில் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தை வாங்கப்போவதாக 2022 ஏப்ரல் நான்காம் திகதி அறிவித்திருந்தார்.

அமெரிக்க சட்டம்

இதனையடுத்து, எக்ஸ் தளத்தின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும்மேல் உயர்ந்தது.

ஆனால், அதற்கு முன்பாகவே, எக்ஸ் தனத்தின் ஐந்து சதவிகிதப் பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அமெரிக்க சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் பங்கை ஒருவர் வாங்கினாலோ வைத்திருந்தாலோ அதுகுறித்த தகவலை பத்து நாள்களுக்குள் சட்டபூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

மஸ்க்கின் மீது வழக்கு

இருப்பினும், எலான் மஸ்க் எக்ஸ் தள பங்குகளை வாங்கிய 11 நாள்களுக்குப் பின்னர்தான் அறிவித்துள்ளார்.

இந்த தாமதமான அறிவிப்பின் மூலம் 150 மில்லியன் டொலர் குறைவாகச் செலுத்தி குறைந்த விலையில் எக்ஸ் தளத்தை வாங்க வழிவகுத்துள்ளது.

இதனால், எக்ஸ் தளத்தை வைத்திருந்த மற்றவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று எஸ்இசி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எலான் மஸ்க்கின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version