Home அமெரிக்கா ஈரானின் நிதி உயிர்நாடிகளை குறிவைக்கும் அமெரிக்கா – முடங்கவுள்ள உலகளாவிய வலையமைப்பு

ஈரானின் நிதி உயிர்நாடிகளை குறிவைக்கும் அமெரிக்கா – முடங்கவுள்ள உலகளாவிய வலையமைப்பு

0

அமெரிக்க நிதித்துறை இன்று(24.04.2026) ஈரான் தொடர்பான புதிய தடைகளை விதித்துள்ளது.

இதில், ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (டாலியன்) சுத்திகரிப்பு நிறுவனம் என்ற சீன பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

344 மில்லியன் டொலர் மதிப்பிலான

சீனாவைத் தளமாகக் கொண்ட சுதந்திரமான சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தைத் தக்கவைப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகின்றன. 

திறைசேரி இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தின்படி, மேலும் சுமார் 40 நிறுவனங்களும் எண்ணெய்க் கப்பல்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

X தளத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய அனைத்து நிதி உயிர்நாடிகளையும் அமெரிக்கா குறிவைக்கும் என்று கூறியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, திறைசேரி 344 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியையும் முடக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/us-targets-iran-financial-lifeline-companies-block-1777061254

NO COMMENTS

Exit mobile version