இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்க சுங்கவரியை குறைக்க கட்டாய உழைப்பு
ஒழிப்புத் திட்டமே உதவியதாக விவசாய பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க
தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கட்டாய உழைப்பை ஒழிக்கும் திட்டம் காரணமாக, இலங்கை ஏற்றுமதிகள்
மீதான அமெரிக்க வரிகள் 12.5% இலிருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் அபிவிருத்தி இலக்கு
இந்த நிலையில் நாட்டின் சில தோட்டப் பகுதிகளில் இன்னமும் கட்டாய உழைப்பு
பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், அதை முழுமையாக ஒழிக்க
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் 2030ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி
வருமானத்தை அடைவதையும், ஐ.நா-வின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதையும்
இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை தற்போது ஐ.நா. ‘கூட்டணி 8.7’ (Alliance 8.7) உலகளாவிய
அமைப்பின் துணைத் தலைமைப் வகிப்பதால், குழந்தை உழைப்பு, நவீன அடிமைத்தனம்
மற்றும் கட்டாய உழைப்பை ஒழிப்பது இன்றியமையாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பெந்தர-எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற பயிலரங்கில் சர்வதேச தொழிலாளர்
அமைப்பின்(ILO) பிரதிநிதி ஜானி சிம்ப்சன் மற்றும் தொழிலாளர் அமைச்சகத்தின்
உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.
Source: https://tamilwin.com/article/us-tax-cuts-reason-is-forced-labor-abolition-plan-1788464938
