Home இலங்கை சமூகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு அமெரிக்க தூதரகம் விசேட அறிவிப்பு

0

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மே 5, 2025 முதல் அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்கும் ஒரு புதிய அறிவிப்பை விடுத்துள்ளது.

இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்கள் DS-160 விசா விண்ணப்பப் படிவத்தில் உள்ள பார்கோட் எண்(Barcode number) (“AA” என்று தொடங்கும்) தங்கள் விசா நேர்காணல் சந்திப்பை திட்டமிடப் பயன்படுத்தப்படும் எண்ணுடன் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளது.

பார்கோட் எண்கள் பொருந்தவில்லை என்றால், விண்ணப்பதாரர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

DS-160 படிவம்

மேலும், சரியான DS-160 படிவத்துடன் புதிய சந்திப்பை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தாமதங்களைத் தவிர்க்க அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் தகவல்களை இருமுறை சரிபார்க்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு – https://www.ustraveldocs.com/lk/en/

NO COMMENTS

Exit mobile version