Home அமெரிக்கா 2026 உலகக் கிண்ண அணி பட்டியலை பூர்த்தி செய்த அமெரிக்கா

2026 உலகக் கிண்ண அணி பட்டியலை பூர்த்தி செய்த அமெரிக்கா

0

2026 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 19வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக்
கிண்ணத்துக்கான 16 அணிகள் கொண்ட பட்டியலை அமெரிக்கா பூர்த்தி
செய்துள்ளது.

தெரிவாகிய அணிகள் 

கனடா அணியை தோற்கடித்து, போட்டிக்கு தகுதிப்பெற்ற 16ஆவது மற்றும் இறுதி அணியாக
அமெரிக்கா நேற்று தெரிவாகியுள்ளது.

இதனையடுத்து 2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக்
கிண்ண அணிகளின் வரிசை இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2026இன் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டிகளில்,
இந்தியா, அவுஸ்திரேலியா, பங்களாதேஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான்,
நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே,
ஜப்பான், ஆப்கானிஸ்தான், தான்சானியா, ஸ்காட்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய
அணிகள் பங்கேற்கவுள்ளன. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா

NO COMMENTS

Exit mobile version