Home இலங்கை சிறிலங்காவை வைத்து காய் நகர்த்த எத்தனித்த அமெரிக்கா: தூக்கியெறிப்பட்ட நிபந்தனை!

சிறிலங்காவை வைத்து காய் நகர்த்த எத்தனித்த அமெரிக்கா: தூக்கியெறிப்பட்ட நிபந்தனை!

0

அமெரிக்காவுடனான பரஸ்பர விகித வரிகளை (Reciprocal Tariffs) குறைக்கும் சிறிலங்காவின் பேச்சுவார்த்தைகளின் போது, சீனாவுடன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் வகையிலான சில நிபந்தனைகளை அமெரிக்கா முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்த நிபந்தனைகளை சிறிலங்கா தனது நடுநிலைக் வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையில் வெளிப்படையாக நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆதரவும் மறுப்பு

இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு உயர் அதிகாரி கூறுகையில், “அனைத்து வர்த்தகக் கூட்டாளிகளுடனும் நியாயமான மற்றும் சமச்சீர் உறவுகளை பேணுவது சிறிலங்காவின் நிலைபாடு.

எனவே, ஒரே ஒரு நாட்டுடன் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் எந்த முயற்சிக்கும் ஆதரவு தர முடியாது” என்று தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் மேலதிக வரி சலுகைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version