Home சினிமா வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! – பிரபல எழுத்தாளர் புகார்

வாழை கதை என்னுடையது.. மாரி செல்வராஜ் திருடிவிட்டார்! – பிரபல எழுத்தாளர் புகார்

0

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்களும் நல்ல விமர்சனம் கூறி வருகிறார்கள்.

மேலும் நல்ல வசூலும் படத்திற்கு குவிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாழை கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

சோ தர்மன் புகார்

10 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய வாழையடி என்ற சிறுகதையை எழுதியதாகவும், அச்சு ஊடகத்தில் வந்த அந்த கதையை தற்போது மாரி செல்வராஜ் சினிமா என்ற காட்சி ஊடகத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார் என எழுத்தாளர் சோ தர்மன் கூறி இருக்கிறார்.

சாகித்ய அகாடமி விருது வாங்கிய எழுத்தாளர் தற்போது வாழை படம் பற்றி கூறி இருக்கும் புகார் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  

Source: https://cineulagam.com/article/vaalai-story-is-mine-says-so-dharman-1724868001

NO COMMENTS

Exit mobile version