Home சினிமா 3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் வாழை திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

வாழை

கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் வாழை. தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தை அவரே தயாரித்தும் இருந்தார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றிகளுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த வாழை திரைப்படமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வாழை தான் இயக்குனர் மாரி செல்வராஜின் முதல் படமாக வெளிவந்திருக்க வேண்டுமாம்.

இப்படத்தின் கதையை தான் முதன் முதலில் அவர் துணை இயக்குனராக இருந்தபோது எழுதியுள்ளார். தனது சிறுவயதில் அனுபவித்த வலிகளை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அந்த வலிகளை திரையின் மூலம் படம் பார்ப்பவர்களுக்கும் கடத்தினார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரின் மனதையும் கலங்கவைத்தது.

மூன்று நாட்கள் வசூல்

முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வாழை திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 9.6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/vaazhai-movie-3-days-box-office-1724639908

NO COMMENTS

Exit mobile version