பிரியந்த வீரசூரிய காவல்துறை மாஅதிபராக நியமிக்கப்பட்டதன் மூலம், அவர் வகித்து வந்த சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவியும், நிலந்த ஜெயவர்தன வகித்து வந்த சிரேஸ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் பதவியும் தற்போது வெற்றிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
உயர் பதவிகள்
இந்த இரண்டு பதவிகளுக்கும் நியமிக்கப்பட உள்ள இரண்டு சிரேஸ்ட பிரதி காவல்துறை மாஅதிபர்களும் தற்போது இலங்கை காவல்துறையில் உள்ள சுமார் 50 சிரேஸ்ட காவல்துறை மாஅதிபர்களில் மிகவும் சிரேஸ்ட பிரதி காவல்துறை மாஅதிபர்களாக உள்ளனர்.
அதன்படி, சிறிது காலம் காவல்துறை ஊடகப் பேச்சாளராகவும் தற்போது காவல்துறை தலைமையக நிர்வாக பிரதி காவல்துறை மாஅதிபர் மற்றும் வடமத்திய மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் ஆகியோரின் பணிகளை மேற்கொள்ளும் புத்திக சிறிவர்தனவும் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பிரதி காவல்துறை மாஅதிபர் தம்மிக்க பிரியந்தவும் இந்த இரண்டு வெற்றிடமான பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
காவல்துறை மாஅதிபர் தொடர்புடைய பரிந்துரைகளை அடுத்த திங்கட்கிழமைக்குள் தேசிய காவல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவார் என்று காவல்துறை தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
