Home சினிமா கார்த்திக் ராஜாவை இழுக்காதீங்க.. இளையராஜா சர்ச்சைக்கு வனிதா மீண்டும் அதிரடி

கார்த்திக் ராஜாவை இழுக்காதீங்க.. இளையராஜா சர்ச்சைக்கு வனிதா மீண்டும் அதிரடி

0

நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோதிகா தயாரிப்பில் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன இந்த படத்தில் ‘ராத்திரி சிவராத்திரி’ என்ற பாடலை பயன்படுத்தி இருந்தார் வனிதா. அதற்கு அனுமதி வாங்கவில்லை என இளையராஜா தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

இது பற்றி பேசிய வனிதா, ‘நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டியவள்’ என ஒரு விஷயத்தை கூறினார்.

கார்த்திக் ராஜாவை இழுக்காதீங்க..

இந்நிலையில் கார்த்திக் ராஜாவை தான் வனிதா திருமணம் செய்ய இருந்தாரா என இணையத்தில் பேச்சு எழுந்து இருக்கிறது.

இது பற்றி தற்போது பேசி இருக்கும் வனிதா “இதில் கார்த்திக் ராஜாவை இழுக்காதீர்கள். கார்த்திக் ராஜா என் நண்பர். அவர் மனைவியும் தான். ராஜா அப்பா எனக்கு கடவுள் போன்றவர். நானும் அவரை போன்றவர் தான். இதை சட்டப்படி பார்த்துக்கொள்கிறேன்” என கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version