Home சினிமா அதை மட்டும் செய்யுங்கள் நான் சினிமாவை விட்டே செல்கிறேன்… வனிதா விஜயகுமார் சவால்

அதை மட்டும் செய்யுங்கள் நான் சினிமாவை விட்டே செல்கிறேன்… வனிதா விஜயகுமார் சவால்

0

நடிகை வனிதா

வனிதா விஜயகுமார், தமிழ் சினிமாவில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் நாயகியாக அறிமுகமானார்.

ஆனால் தொடர்ந்து அவர் நடிக்கவில்லை, இடையில் திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தவர் தொடர்ந்து ஆக்டீவாக ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெறுவது, நடுவராக இருப்பது, சொந்த தொழில் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்.

இவரது மகள் ஜோவிகா தயாரிக்க வனிதா இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் Mrs & Mr. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அதில் வந்த பணத்தை வைத்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படம் ஜுலை 11ம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

வனிதா பேட்டி

சமீபத்தில் வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், முதலில் என்னுடைய படம் பாருங்கள், அதன் பிறகு என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.

என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்.

நான் எந்தப் படத்தில் இருக்கும் சுருட்டவில்லை, நீங்கள் படத்தை பார்த்தால் தான் புரியும் என தெரிவித்திருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version