மாதத்தில் இரண்டு தடவை மக்கள் சந்திப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வவுனியா
– மன்னார் பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ தெரிவித்துள்ளார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களின் குறைகளை அடையாளம் கண்டு அதனை தீர்க்கும்
பொருட்டு மாதத்தில் இரண்டு நாட்கள் ‘பொதுமக்கள் குறைதீர்’ நாளாக
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பிரச்சினை
அதற்கமைவாக, வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் மாதத்தின்
முதலாவது மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் சந்திப்பு இடம்பெற்வுள்ளது.
இதன்போது பிரதி பொலிஸ் மா அதிபரை
சந்தித்து பொது மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
