Home இலங்கை சமூகம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா: முன்னாயத்தங்கள் ஆரம்பம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா: முன்னாயத்தங்கள் ஆரம்பம்

0

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலானது இன்றையதினம் (24)பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. 

எதிர்வரும் 20.05.2024 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

மக்களுக்கு நற்செய்தி: பால் மா விலையில் பாரிய வீழ்ச்சி

ஆலய திருப்பணி வேலை

இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய, ஆலய திருப்பணி வேலைகளை மேற்கொள்ளும் வகையில் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது. 

வாகனங்கள் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவித்தல்

பலர் கலந்து கொண்டனர்

எதிர்வரும்  வைகாசி மாதம்( 5)ஆம் திகதி திங்கள் பாக்குத் தெண்டல் நிகழ்வும் (12)ஆம் திகதி திங்கள் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் (20)ஆம் திகதி வைகாசிப் பொங்கல் நிகழ்வும் இடம்பெறவுள்ளமையும் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள், முல்லை வலயக்கல்வி பணிமைனையின் உதவிப் பணிப்பாளர், மின்சாரசபையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரி, மாவட்ட காவல்துறை பொறுப்பதிகாரி, மாவட்டத்தின் முப்படை அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரணில் – பசிலுக்கும் இடையில் விசேட சந்திப்பு: 3 விடயங்கள் குறித்து முக்கிய கவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version