யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் பல்வேறு
பிரச்சினைகள் காணப்படுவதாக ஏற்பாட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான
இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில்
நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
துயிலுமில்லத்தின் பெயரால் பணம் கோரப்பட்டு
அவர் மேலும் தெரிவித்ததாவது
உடுத்துறை மாவீரர் துயிலுமுல்லத்தின் ஏற்பாட்டுக்குழு இம்முறை மாவீரர்
பெற்றோர்களை கௌரவிப்பு விடயத்தில் அனைத்து கட்சிகள் பொது அமைப்புக்கள் இணைந்து
கௌரவிப்பினை மேற்கொள்வதென தீர்மானித்திருந்தது.
இதனால் வருடாந்தம்
மாவீரர் பெற்றோர் உறுவினர் கௌரவிப்பு நிகழ்வின் மேற்கொள்ளும் முன்னாள் மாகாண
சபை உறுப்பினர் ச.சுகிர்தனிடமும் இது விடயமாக பேசியதன் அடிப்படையில்
அனைவரும் இணைந்தே மாவீர்கள் பெற்றோர்கள் உறுவினர்களை கௌரவிப்பது என்ற
தீர்மானத்தை எட்டியது.
ஆனால் மாவீரர் ஏற்பாட்டுக்குழுவில் இருந்த
ஒரு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அதனை குழப்பி தாம் தனியாக மாவீரர் பெற்றோர்
உறுவினர்கள் கௌரவிப்பு நிகழ்வை செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருவதனால்
உடுத்துறை மாவீரர் ஏற்பாட்டு குழுவினர் பல்வேறு சங்கடங்களை
எதிர்நோக்கினர்.
இதனால் தாம் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்
ச.சுகிர்தனிடம் மீண்டும் தொடர்பு கொண்டு மாவீரர் பெற்றோர் உறவினர் கௌரவிப்பை
தாங்கள் தனியாக மேற்கொள்ளுமாறும் தெரிவித்ததுடன் ஏற்பட்ட இடையூறுகளுக்கு தான் சுகிர்தனுடம் மன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் உடுத்துறை மாவீரர்
துயிலுமில்லத்தின் பெயரால் பலரிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும்
ஆனால் அவற்றிற்குரிய சரியான கணக்குகளை இதுவரை எண்பிக்கவில்லை என்றும் இவ்வாறான
செயற்பாடுகளால் தமது உடுத்துறை மாவீரர் செயற்பாட்டுக்குழு பல்வேறு நிர்வாக
நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் உடுத்துறை மாவீரர் செயற்பாட்டு குழு
உறுப்பினர் இரத்தினசிங்கம் முரளிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
