Home இலங்கை பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வத்திக்கானின் ஒத்துழைப்பு

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வத்திக்கானின் ஒத்துழைப்பு

0

இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வத்திக்கானின் ஒத்துழைப்பை
பாப்பரசர் பதின்நான்காம் போப் லியோ அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மான்சிக்னோர் ரொபர்டோ லுச்சினி இதனை இன்று(10) தெரிவித்துள்ளார்.

இரங்கல்

இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலைத் தெரிவிக்கவும்,
இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கு தனது ஒற்றுமையை உறுதியளிக்குமாறு,
பாப்பரசர் லியோ தம்மிடம் தெரிவித்ததாக  லுச்சினி கூறியுள்ளார்.

இந்த பேரிடருக்குப் பின்னரான சூழ்நிலையில் தேசத்தை மீண்டும்
கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் இலங்கை மக்கள் நம்பிக்கையுடன் செயல்பட
வேண்டும் என்று பாப்பரசர் கேட்டுக் கொண்டதாக, வணக்கத்துக்குரிய மான்சிக்னோர்
ரொபர்டோ லுச்சினி கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version