Home முக்கியச் செய்திகள் வவுனியாவில் நகரசபையால் முற்றாக அகற்றப்பட்ட பேருந்து நிலையம்

வவுனியாவில் நகரசபையால் முற்றாக அகற்றப்பட்ட பேருந்து நிலையம்

0

வவுனியா (Vavuniya) பகுதியில் பயன்பாடற்ற நிலையில் இருந்த பேருந்து நிலையமொன்று நகரசபையால் அகற்றப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்த பேருந்து நிலையமே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை இன்று (05) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பேருந்து

பழமையான குறித்த பேருந்து தரிப்பிடம் தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

இதனை அகற்றுமாறு நகரசபைக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்தும் முறைப்பாடுகளும்
கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து, இன்றையதினம் (05) நகரசபையால் குறித்த தரிப்பிடம் இடித்து
அகற்றப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிக்கு அண்மையில் தேவையான இடத்தில் புதிய பேருந்து
தரிப்பிடம் ஒன்றை அமைக்க உள்ளதாக வவுனியா நகரசபை செயலாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/UfPHLc1ag2U

NO COMMENTS

Exit mobile version