Home இலங்கை சமூகம் வவுனியாவில் இடம்பெறும் கலாநேத்ரா விருதுக்கான விண்ணப்பம் கோரல்

வவுனியாவில் இடம்பெறும் கலாநேத்ரா விருதுக்கான விண்ணப்பம் கோரல்

0

வவுனியாவில் இடம்பெறும் கலாநேத்ரா 2025 விருதுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேசசெயலகமும் மற்றும் கலாசார பேரவையும் இணைந்து குறித்த விண்ணப்கோரலை முன்வைத்துள்ளன.

விண்ணப்பதாரர் வவுனியா பிரதேச செயலக பிரிவினை நிரந்தர வதிவிடமாக
கொண்டிருப்பதுடன், 25 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் 

துறைசார்ந்த ஆவணப்பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.   

  

ஆவணங்கள்
பரிசீலிக்கப்பட்டு தேவை ஏற்படும் பட்சத்தில் விண்ணப்பதாரி நேர்முகத்
தேர்வுக்கு அழைக்கப்படுவார்.

கடந்த காலங்களில் பிரதேச விருது பெற்ற கலைஞர்கள்
மீளவும் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் 

குறித்த துறையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் விருது தெரிவிற்குள் உள்வாங்கப்படுவர்.    

விண்ணப்பங்களை 18.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேசகலாசார உத்தியோகத்தரிடம்
சமர்ப்பித்தல் வேண்டும்.

இறுதித் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இம்முறைசிறுகதை,கவிதை,நாவல், கட்டுரை, நாடக எழுத்துரு ,இசை (சாஸ்திரிய இசை,
பண்ணிசை, ஆக்க இசை, மெல்லிசை) ,மரபுக்கலை (நாட்டுக்கூத்து,வில்லுப்பாட்டு),
நாடக ஆற்றுகை,
சிற்பம் ,ஓவியம் ,பரதம், வாத்திய இசை (வயலின், வீணை, புல்லாங்குழல்,
ஆர்மோனியம், மிருதங்கம், தபேலா, கடம், முகர்சிங், ஓர்கன் போன்றன) ,குறும்படம்
,இயல் (பேச்சு, விவாதம், பட்டிமன்றம், வழக்காடுமன்றம்) , அறிவிப்பு ,மரபு இசை
(தவில், நாதஸ்வரம், பறை,உடுக்கு) ,ஊடகம் போன்ன துறைகளுக்கு விண்ணப்பம்
கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version