வவுனியா (Vavuniya) யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த சில
நடைபாதை வியாபார நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகர சபையினால் குறித்த கடைகள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
இயந்திர பெட்டி
அக்கடைகள் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில்
ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக மாநகர சபையினால் நடைபாதை கடைகள் அகற்றப்படும் என
தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு
அருகாமையில் இருந்த தமிழ் மக்களுடைய கடைகள் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
