Home இலங்கை சமூகம் வவுனியாவில் கணவனால் கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியை: சோகமயமான கிராமம்

வவுனியாவில் கணவனால் கொல்லப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியை: சோகமயமான கிராமம்

0

கணவனால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் இறுதி கிரியைகள்
வவுனியா நெடுங்கேணி அனந்தர்புளியங்குளம் நொச்சிக்குளத்தில் நேற்றையதினம்(5) நடைபெற்றது.

தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன் புளியங்குளம் பொலிஸ்
நிலையத்தில் சரணடைந்த கொடூர சம்பவம் செவ்வாய் கிழமை (03.06) இடம்பெற்றிருந்தது.

இறுதி கிரியை

குறித்த சம்பவத்தில் அனந்தர்புளியங்குளம் நொச்சிகுளத்தை சேர்ந்த ஆசிரியையான
சுகிர்தரன் சுவர்ணலதா வயது32 என்ற பெண் கொல்லப்பட்டிருந்தார்.

கணவனின் வாக்கு மூலத்தை பெற்ற புளியங்குளம் பொலிசார் தடயவியல் பொலிசாரின்
உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆசிரியரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று
பரிசோதனையின் பின் நேற்றுமுன்தினம் (04.06) மதியம் சடலம் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டது.

இன்று (05.06) இறுதி கிரியைகள் நடைபெற்ற நிலையில் பெருந்திரளான கிராம மக்கள்
கலந்து கொண்டு ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தினர்.இதன்போது நொச்சிகுளம் கிராமமே சோகத்தில் முழ்கியிருந்தது.

NO COMMENTS

Exit mobile version