Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் பறிபோன பல்கலை மாணவனின் உயிர்.. கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

தமிழர் பகுதியில் பறிபோன பல்கலை மாணவனின் உயிர்.. கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

0

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே உயிரிழந்த மாணவன் ஆவார். 

விசாரணை நடவடிக்கை 

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  

இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் அற்புதராஜா கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version