Home இலங்கை சமூகம் ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

ஒட்டுமொத்த உலகையும் மிரள வைத்த யாழ். தமிழன் : யார் இந்த வேடன்?

0

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் அதிகமாக பேசப்பட்ட ஒரு பெயர் தான் வேடன். 

கேரளாவைச் (Kerala) சேர்ந்த மலையாள ராப் பாடகரான இவரது பாடல்கள் தான் சமீப நாட்களாக ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்டவற்றில் அதிகம் இடம்பெறுபவை.

வேடன் என்ற மேடைப் பெயரால் பிரபலமாக அறியப்படும் ஹிரந்தாஸ் முரளி, கேரளாவின் திருச்சூரில் பிறந்தவர்.

யாழ்ப்பாணத்தை (Jaffna) பூர்வீகமாகக் கொண்ட இவர் மிகச்சிறந்த சொல்லிசைப் பாடகராக தன்னை நிலைநிறுத்தி வருகின்றார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் ஹிரந்தாஸ் முரளி (வேடன்).

திருச்சூர் தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்வப்னபூமி (கனவுகளின் நிலம்) என்ற பகுதியில்தான் வளர்ந்தார்.

சிறுவயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்தது. அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கினார்.

சிறுவயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது அவருக்கு விளையாட்டாக வைக்கப்பட்ட பெயர்தான் வேடன்.

இந்தப் பெயருக்குப் பின்னணியில் சாதிய அடையாளமும் இருக்கிறது என்பது புரிந்து, அந்தப் பெயராலேயே மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். அது அப்படியே மக்களாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேடன் யார்? அவரது பின்னணி என்ன என்பது குறித்து கீழ் உள்ள காணொளியில் காண்க…

https://www.youtube.com/embed/5x6PLNNmvGc

NO COMMENTS

Exit mobile version