Home இலங்கை சமூகம் இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

0

இளையோரின் சிந்தனைகள் தடம் மாறமால் இருக்க வேண்டுமானால் இளங்கலைஞர்
மன்றம் போன்று பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார்.

புனரமைக்கப்பட்ட நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தின் திறப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“இப்போது இசை விழாக்கள் அல்லது பொதுவான நிகழ்வுகளுக்கு ஆட்கள் வருவது மிகக்
குறைவு. இன்று இந்த மண்டபம் நிறைந்திருப்பதைப்போல எதிர்காலத்திலும் இருக்கவேண்டும்.

தவறான வழியில் இளைஞர்கள்

இன்றைய இளையோரின் சிந்தனை திசை திருப்பப்படுகின்றது. அவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது தெரியாமல் உள்ளதால் தவறான வழிக்கு வழிப்படுத்தப்படுகின்றார்கள். 

அவர்களின் நலனுக்காக இளங்கலைஞர் மன்றம் போன்று பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

NO COMMENTS

Exit mobile version