Home இலங்கை சமூகம் யாழில் நாளுக்கு நாள் உயரும் மரக்கறிகளின் விலை

யாழில் நாளுக்கு நாள் உயரும் மரக்கறிகளின் விலை

0

வடக்கில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். (Jaffna) குடாநாட்டில் பெய்துவரும் மழையால் மரக்கறிப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்மழை மற்றும் வெள்ளம் காரணமாக யாழிலும் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

மரக்கறிவகைகளின் விலை 

அந்தவகையில், திருநெல்வேலிச் சந்தையில் நேற்றைய மரக்கறி வகைகளின் விலைப்பட்டியல் வருமாறு,

கத்தரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும், பயிற்றங்காய் கிலோ 400 ரூபாவாகவும், பாவற்காய் கிலோ 400 ரூபாவாகவும், தக்காளிப் பழம் கிலோ 350 ரூபாவாகவும் விற்பனையாகின்றது.

மேலும் , மரவள்ளிக்கிழங்கு கிலோ 250 ரூபாவாகவும், கீரை ஒரு பிடி 150 ரூபாவாகவும், முருங்கைக்காய் கிலோ 1000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/vegetables-price-increase-in-jaffna-today-1732694583

NO COMMENTS

Exit mobile version