Home இலங்கை அரசியல் பிரதமர் மோடியின் செய்திக்கு பதிலளித்துள்ள அநுர குமார

பிரதமர் மோடியின் செய்திக்கு பதிலளித்துள்ள அநுர குமார

0

புதிய இணைப்பு

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க, இந்திய பிரதமா் நரேந்திர மோடி (Narendra Modi) வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார்.

அதில் “பிரதமர் மோடி, உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி.

நமது நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒன்றாக, நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் பணியாற்றலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) இந்திய பிரதமா் நரேந்திர மோடி (Narendra Modi) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் தமது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளா்ச்சிக்கான முன்னெடுப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு சிறப்பிடம் உள்ளது.

இந்நிலையில், இரு நாட்டு மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் நலனுக்காக இந்தியா-இலங்கை இடையிலான பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அநுரகுமாரவுடன் நெருங்கிப் பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ என மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

Source: https://tamilwin.com/article/narendra-modi-congratulates-anura-kumara-1727062966

NO COMMENTS

Exit mobile version