Home இலங்கை அரசியல் சாதாரண மக்களுக்கு காரொன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை: சாடும் சாணக்கியன்

சாதாரண மக்களுக்கு காரொன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை: சாடும் சாணக்கியன்

0

சாதாரண மக்களுக்கு காரொன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நெல்லை நல்ல விலைக்கு விற்கு அந்த பணத்தில் அகுவா கார் ஒன்றை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு பெட்ரோல் அடித்து கடைக்கு செல்ல இருந்த மக்களின் வயிற்றில் தான் இந்த அரசாங்கம் அடித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டம்

அதில் மேலும், 2025 வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படும் போது சாதாரணமாக அன்றி அது குறித்து அதிகம் ஆய்வு செய்ய வேண்டி இருக்கும் என எதிர்பார்த்தோம். சாதாரண வரவு செலவு திட்டமாக அன்றி அதிக விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்த்தோம்.

ஏனெனில், தேசிய மக்கள் சக்தி வேறுபட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சி என்ற ரீதியிலேயே அந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் வழமை போன்ற வரவு செலவு திட்டமொன்றை ஆய்வு செய்வது போன்றே இதுவும் காணப்பட்டது.

அதிலிருந்த இலக்கங்கள் மற்றும் எண்ணிக்கைகள் மாத்திரமே ஆய்வு செய்யப்பட வேண்டி இருந்தது. கொள்கை ரீதியாக பாரியளவில் எந்தவொரு மாற்றமும் இல்லை. எனவே வரவு செலவு திட்ட உரையிலும் எதையும் அதிகம் தேடிப் பார்க்கும் வகையில் எதுவும் இருக்கவில்லை.

வாகன இறக்குமதி

கடந்த காலத்தில் 5 வருடங்கள் பழைய வாகனங்கள் இறக்குமதிக்கு அனுமதி இருந்ததாகவும் அது தற்போது மூன்று ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் சாதாரண மக்களுக்கு காரொன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஜாஜ் முச்சக்கர வண்டியொன்று 19 இலட்சம் ரூபாய். நெல்லை நல்ல விலைக்கு விற்கு அந்த பணத்தில் அகுவா கார் ஒன்றை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு பெட்ரோல் அடித்து கடைக்கு செல்ல இருந்த மக்களின் வயிற்றில் தான் இந்த அரசாங்கம் அடித்துள்ளது.

இந்த நாட்டிலே ஒரு அரசியலமைப்பை கொண்டு வராமல் காலத்தை கடத்திக் கொண்டு இருந்து இன்னொரு தேர்தலுக்கு போகலாம் என்று நினைத்தால் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை விட மிக மோசமான நிலையில் தான் நீங்கள் வீடு செல்வீர்கள் என்பதை மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version