Home இலங்கை பொருளாதாரம் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் – வெளியான புதிய தகவல்

நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள வாகனங்கள் – வெளியான புதிய தகவல்

0

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி செலவினம்

மேலும், கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் 318 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 10,645 மில்லியன் இலங்கை ரூபாய்) குறைந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மத்திய வங்கியின் தரவு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 182 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 6,093 மில்லியன் இலங்கை ரூபாய்) மதிப்பிலான வாகனங்கள் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இது, இந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் வாகன இறக்குமதி செலவினத்தில் 27.1 சதவீதம் அல்லது 2,276 மில்லியன் ரூபாய் குறைவாகும்.

இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 163 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 5,455 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டின் வாகன இறக்குமதிச் செலவு ரூ. 638 கோடி அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 157 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 52,614 கோடி) மதிப்புள்ள வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

Source: https://tamilwin.com/article/vehicle-import-in-sril-anka-1785724338

NO COMMENTS

Exit mobile version